கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் வைக்கப்பட்ட பத்ம பூஷன் விருது.!

Captain Vijayakanth Padma Bhushan

Vijayakanth : விஜயகாந்த் நினைவிடத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை , அவரது நினைவிடத்தில் வைத்து வணங்கினர் விஜயகாந்த் குடும்பத்தினர்.

தமிழ் திரைத்துறையில் கதாநாயகனாகவும், திரைத்துறையினர் , பொதுமக்கள் மத்தியிலும் நிஜ நாயகனாகவும் திகழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். திரைத்துறையில் கோலோச்சியது போல, தமிழக அரசியலில் களமிறங்கி , தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியை தொடங்கி தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு வரையில் முன்னேறியவர் விஜயகாந்த்.

திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் மக்கள் மத்தியில் நல்ல மனிதர் என்ற பெயரெடுத்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 2023 டிசம்பர் மாதம் உயிரிழந்தார். கேப்டன் விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்து கௌரவித்து இருந்தது மத்திய அரசு.

இந்த விருது வழங்கும் நிகழ்வானது நேற்று (மே 10) டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. விஜயகாந்த் சார்பாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் , குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டார்.

கேப்டன் விஜயகாந்தின் பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டு இன்று சென்னை திரும்பிய பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன் பிறகு, விஜயகாந்த்திற்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதானது சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் வைக்கப்பட்டது. அப்போது விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், மைத்துனர் சுதீஷ் மற்றும் தேமுதிக தொண்டர்கள் என பலர் விஜயகாந்த் நினைவிடத்தில் வணங்கி அஞ்சலி செலுத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்