முழுமையாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என திமுக தலைவருக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நேற்று, அதிமுக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை முழுமையாக வாங்க மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் எவ்வித உச்சவரம்புமின்றி நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவும் அதற்கேற்றவாறு தேவையான எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள், கடந்த 2019 முதல் 2020 ஆம் ஆண்டுக்கான கொள்முதல் பருவத்தில் 2135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து அதன் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து உள்ளதாக கூறியுள்ளார். மேலும் 1500 கொள்முதல் நிலையத்துக்கு பதிலாக 2135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். கள நிலவரம் அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் குறை கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…