அண்ணாமலையின் பாதயாத்திரை; தொடங்கி வைக்கும் அமித்ஷாவின் பயணத்திட்டம்.!

Amitshah tn pad

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையை தொடங்கி வைக்கும் அமித்ஷாவின் இரண்டுநாள் தமிழக பயணத்திட்டம் இதுதான்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரச்சார பாதயாத்திரையாக, இன்று தமிழகம் முழுவதும் ராமேஸ்வரத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்குகிறார். இந்த பாதயாத்திறையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைக்க உள்ளார்.

அடுத்த வருட நாடாளுமன்ற தேர்தல் குறித்த 234 தொகுதிகளிலும் பிரச்சாரத்தை, உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை கோயில் நகரமான ராமேசுவரத்தில் இருந்து தொடங்குகிறார். இதற்காக அமித்ஷா, டெல்லியிலிருந்து பிற்பகல் 4 மணிக்கு மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்து மாலை 5.45 மணியிலிருந்த்து 7.15வரை பாதயாத்திரை தொடக்க விழாவில் உரையாற்றுகிறார்.

இதையடுத்து 8.30 மணிக்குள் தங்கும் விடுதியில் இரவு விருந்தை முடித்துக்கொண்டு, 8.30 மணிக்குப்பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மற்றும் முக்கிய நபர்களுடன் சந்தித்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்துவார். நாளை காலை 5.40 மணிக்கு ராமேஸ்வரத்தின் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, காலை 10.30 மணியளவில் அக்கட்சி நிர்வாகியின் இல்லத்துக்கு அமித்ஷா செல்கிறார்.

பிறகு காலை 11 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் குறித்த புத்தகத்தை வெளியிடும் அமித்ஷா, நண்பகல் 12.05க்கு அப்துல்கலாம் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, இதையடுத்து 12.40க்கு விவேகானந்தர் நினைவிடத்துக்கும் செல்கிறார். மதியம் 1.20 மணிக்கு ஹெலிகாப்டரில் மதுரை புறப்படும் அமித்ஷா, பயணத்தை முடித்துக்கொண்டு 2மணிக்கு தனிவிமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்