“சாலைப்பணி டெண்டரில் பேக்கேஜ் முறை ரத்து;கி.ரா.வுக்கு நினைவிடம்”- அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு..!

Published by
Edison

மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு நினைவிடம் மற்றும் சாலைப் பணி டெண்டரில் பேக்கேஜ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது,சட்டப்பேரவையில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, “முன்னாள் முதல்வர் கருணாநிதி வகித்த பொதுப்பணித்துறையை எனக்கு வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கூறி நன்றி தெரிவித்து,முக்கிய திட்டங்களை அறிவித்தார்.அதன்படி,

  • சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாகக் கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலை ஆறு வழிச் சாலையாக தரம் உயர்த்தப்படும், சென்னை துறைமுகத்திலிருந்து மணலி திருவொற்றியூர் ஆகிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக் கடல் பாலம் அமைக்கப்படும்.
  • சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதால், ஆக.30 முதல் O.M.R சாலையில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தப்படும்.
  • அதன்படி, பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூல் நிறுத்தப்படும்
  • தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு நினைவிடம் மற்றும் சாலைப் பணி டெண்டரில் பேக்கேஜ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பில் நினைவிடம் கட்டப்படும்.

ஒரு கோட்டத்தில் ஒரே ஒப்பந்ததாரர் சாலை பணிகளை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.மேலும்,தரமற்ற சாலைகளை அமைத்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தரமற்ற சாலைகளை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்தார்.

Recent Posts

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

32 minutes ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

45 minutes ago

ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…

1 hour ago

2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…

2 hours ago

அடுத்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா எங்கு? எப்போது? வெளியானது அறிவிப்பு.!

லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…

2 hours ago

பண மோசடி வழக்கு: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.!

செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…

3 hours ago