சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!
மாநிலச் செயலாளராக உள்ள கே. பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், புது மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி விதிகளின்படி 72 வயதுக்கு மேல் எந்த விதமான பொறுப்புகளிலும் இருக்க முடியாது என்பதால் தன்னை விடுவிக்குமாறு விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்திருந்தார்.
எனவே, அவர் தன்னுடைய பதவியில் இருந்து விலாகவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது, புதிய மாநிலச் செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவு புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பெ.சண்முகம் புதிய மாநிலச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
பெ.சண்முகம் யார்?
மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகம் திருச்சி லால்குடியைச் சேர்ந்தவர். இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாணவ பருவத்தில் இருந்தபோதில் இருந்தே பணியாற்றி வருகிறார். மத்திய குழு உறுப்பினராக இருந்த அவருக்கு மாநில செயலாளாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெ.சண்முகம் தமிழ்நாடு மலைவாழ் சங்கம் உள்ளிட்ட சங்கங்களிலும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.