காவிரி டெல்டாவில் அறுவடைசெய்யப்பட்ட நெல்லைக் கொள்முதல் செய்ய உடனடியாக உத்தரவிட்ட தமிழக முதல்வருக்குத் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் கூறியிருப்பதாவது,
”காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி சுமார் 1.25 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது மே முதல் வாரம் தொடங்கி அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளது. ஆனால் இன்னமும் நேரடி நிலையங்கள் திறக்கப்படாததால் அந்த அறுவடைப் பணிகள் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் நேரிலும், தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததை அடுத்து நேற்று இரவு தமிழக முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றேன். இதனையடுத்து, அவர் உடனடியாக இன்று முதல் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உடனடியாகக் கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் அதிரடியாக அவசர உத்தரவை பிறப்பித்துள்ளதாக தமிழக முதல்வர் அலுவலக அதிகாரிகள் தொலைபேசி முலம் தெரிவித்தனர். டெல்டா விவசாயிகளின் பாதிப்பை உணர்ந்து கொரோனா தொற்றின் நெருக்கடி காலத்திலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதல்வர் மற்றும் உணவுத் துறை அமைச்சர், அரசு உயர் அதிகாரிகள் அனைவருக்கும் டெல்டா விவசாயிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…