தமிழ்நாட்டில் எழும் சர்ச்சைகளுக்கு ஆளுநரே காரணம்… பா.சிதம்பரம்

P. Chidambaram

தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. ஆளுநரும் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, அரசுக்கு எதிராக செயல்படுவதும் இருந்து வருகிறது. சமீபத்தில், பலக்லைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கும், அரசுக்கு மோதல் ஏற்பட்டது. சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆளுநருக்கு, தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி வைத்தது.

அப்போது, துணை வேந்தர் நியமனத்தில் யுஜிசி பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும் என ஆளுநர் தரப்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும்,  3 பல்கலைக் கழகங்களுக்கும் துணைவேந்தர்களை தேர்வு செய்ய யுஜிசி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய தேடுதல் குழுக்களை அறிவித்தார்.

இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பிலும், பல்கலைக் கழக பேராசிரியர் சங்கங்களும், மாணவர் அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வருடன் ஆலோசனை நடத்த ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து, பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய தாம் நியமித்த தேடுதல் குழுக்களை திரும்பப் பெறுவதாக ஆளுநர் ரவி அறிவித்தார்.

10 நாட்கள்.! வெளிநாட்டு பயணத்தை இன்று துவங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

ஆளுநரின் இதுபோன்ற செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தவகையில், சமீப காலமாக ஆளுநரின் எடுக்கும் முடிவு அல்லது வெளியிடும் அறிவிப்பு, பல்வேறு எதிர்ப்புகளுக்கு பின்னர் திரும்ப பெற்று வரும் நிலையில், இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் எழும் சர்ச்சைகளுக்கு ஆளுநரே காரணம் என்று முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டில் எழும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளுநர் ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார்.

சென்னை பல்கலைக்கழகம் 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இருப்பதற்கு ஆளுநர் ரவியே காரணம். 1857ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் 3 பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக்கழகமும் ஒன்று. எனவே,  துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ரவி மோதல் போக்கை கடைபிடிப்பதே காரணம் என்றும் தமிழகத்தில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழக ஆளுநர் ஏன் இருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பிய அவர், நாட்டின் உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth