வேலையின்மை பற்றி நிதியமைச்சர் எதுவும் பேசவில்லை – பா.சிதம்பரம் விமர்சனம்

p chidambaram

இளைஞர்களைப் பற்றி நிறைய பேசியுள்ள மத்திய நிதியமைச்சர் வேலை வாய்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை என மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் குற்றசாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பா.சிதம்பரம், கடந்த 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளில் இந்தியா பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி வருவதாக மத்திய அரசு பெருமை பேசி வருகிறது.

குடியரசு தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு முன் 63 பக்க பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சகம் வெளியிட்டது. இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சரும் புள்ளி விவரங்களை மூன்று முறை கூறியுள்ளார். அரசு குறிப்பிட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் பொருளாதார நிபுணர்களால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளன.

நடுத்தர மக்களுக்கு புதிய குடியிருப்பு திட்டம்! பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்!

இளைஞர்களைப் பற்றி நிறைய பேசியுள்ள மத்திய நிதியமைச்சர் வேலை வாய்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை. அதாவது வேலையில்லா திண்டாட்டம் குறித்து எதுவும் பேசவில்லை. இந்திய தொழிலாளர்கள் ஆய்வறிக்கை படி 15 லிருந்து 29 வயது வரையிலான இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 10% ஆக உள்ளது. கிராமப்புறத்தில் வேலையின்மை விகிதம் 8.3% ஆகவும், நகர்ப்புறங்களில் 13.8% ஆகவும் உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் உள்ளது.

இதுபோன்று பட்டதாரிகள் மத்தியில் வேலையின்மை விகிதம் 42.3% ஆக உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் அம்பலமாகி உள்ளது. இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுவது பற்றி நிதி அமைச்சர் எதுவும் கூறவில்லை. வேலையில்லா திண்டாட்டத்தை போக்க அரசு என்ன செய்ய போகிறது என்பது பற்றி ஒருவார்த்தை கூட இல்லை. இலவச உணவு தானிய திட்டம் குறித்து பேசியுள்ளார். ஆனால், உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியாவின் மோசமான நிலை குறித்து பேசவில்லை எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்