உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மருதுவானமையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 'தனது தந்தை நலமாக இருப்பதாக' கார்த்தி சிதம்பரம் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற சபர்மதி ஆசிரமத்தில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல்நிலை குறித்து உடனடியாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்திருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதி
ப. சிதம்பரம் மயங்கிவிழுந்த பிறகு உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அகமதாபாத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையான அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறார்கள்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்களின் முதல்கட்ட பரிசோதனையில், அவருக்கு வெப்ப சோர்வு (heat exhaustion) மற்றும் நீரிழப்பு (dehydration) ஏற்பட்டதாகவும், ஏப்ரல் மாதத்தில் குஜராத்தில் வெப்பநிலை 38-40 டிகிரி செல்சியஸை எட்டியிருந்தது, இது அவரது உடலை பாதித்திருக்கலாம் எனவும் தகவலை தெரிவித்துள்ளனர். மற்றபடி அவருடைய உடல் நிலை நன்றாக தான் இருக்கிறது எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
கார்த்தி சிதம்பரத்தின் பதிவு
சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ப. சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், சமூக வலைதளமான X வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனது தந்தை ப. சிதம்பரம் நலமாக உள்ளார். அவர் சபர்மதி ஆசிரமத்தில் வெப்பத்தால் மயங்கி விழுந்தார், ஆனால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஓய்வெடுத்து வருகிறார். அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி” என்று கூறி விளக்கம் அளித்தார்.