மே 11 முதல் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் கிடைக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Default Image

ஸ்டெர்லைட் மூலம் தமிழகத்திற்கு 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் என்று தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வரவுள்ளதால் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேகொண்டார். தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, தேவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வரும் 24ம் தேதிக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது என்றும் மீண்டும் முழு ஊரடங்கு நிலை வந்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஆலோசனை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் மே 11 முதல் கிடைக்கும் என்றும் தமிழகத்திற்கு 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருவதாக ஸ்டெர்லைட் உறுதி அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

தனியார் நிறுவனங்களிடம் ஆக்சிஜன் உற்பத்திக்காகவும், அதை பெறுவதற்க்காகவும் அதிகாரி நியமிக்கப்படுவார். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொழில்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. வரும் காலகட்டத்தில் ஆக்சிஜன் தேவையை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

மேலும், ஊரடங்கை அமல்படுத்த தொழிலதிபர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். தொற்று பரவல் சங்கிலி அறுவப்படுவதில் தான் ஊரடங்கின் வெற்றி உள்ளன. தொழித்துறையினரின் கோரிக்கை குறித்து அடுத்தகட்ட அறிவிப்பை முதல் வெளியிடுவார் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்