#ELECTIONBREAKING: அமமுகவுடன் ஓவைசி கூட்டணி.. 3 தொகுதிகள் ஒதுக்கீடு..!
அமமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 06.04 2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்போவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், திரு.பாரிஸ்டர் அசதுத்தீன் உவைசி M.P., தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியும் (AIMIM) கூட்டணி அமைத்து தோதலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையியான கூட்டணியில், அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு தமிழ்நாட்டில் மூன்று 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
1. வாணியம்பாடி
2. கிருஷ்ணாகிரி
3. சங்கராபுரம்