மேம்பாலம் இடிந்து விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு..!
மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து தொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை மதுரையில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. மதுரையில் புதுநத்தம் சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான ஆகாஷ் சிங் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.
இந்நிலையில், மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து தொடர்பாக பணிகளை மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் பிரதீப் ஜெயின், பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின் ஒப்பந்ததாரர் பாஸ்கரன் ஆகியோர் மீது தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த மேம்பாலம் பணியானது மத்திய ,மாநில அரசுகள் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்துதான் கடந்த 3 ஆண்டுகளாக இங்கு பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது.