கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 680 கோடிக்கு மது விற்பனை ….!
கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.675.19 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக பண்டிகை நாட்களில் துணிக்கடைகளில் எப்படி கூட்டம் அலைமோதுகிறதோ, அதே போல மதுபானக்கடைகளிலும் மதுபிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும். சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகளவு நடைபெறும்.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 680 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாம். பொங்கலுக்கு மறு தினமான இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு. எனவே, இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபிரியர்கள் நேற்றே இரண்டு நாட்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைத்துள்ளனர்.
ஜனவரி 12 ஆம் தேதி ரூ.155.06 கோடிக்கும், ஜனவரி 13 ஆம் தேதி ரூ.203.05 கோடிக்கும், ஜனவரி 14 ஆம் தேதி 317.08 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.