சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு 200 பேருக்கு மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் ஈரோடு ஆட்சியர் அலுவலகம் நோக்கிசென்றதால் அவர்களை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம், வைராபாளையம், அசோகபுரம், பெரிய அக்ரஹாரம், சுண்ணாம்பு ஓடை, மரவாபாளையம், சடையம்பாளையம், ராசாம்பாளையம், வெட்டுக்காட்டுவலசு, கங்காபுரம் ஆகிய பகுதிகளை சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இங்கு வடமாநிலத்தவர்கள் பலர் வேலை செய்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் இயங்காததால், கடந்த 50 நாட்களுக்கு மேலாக வடமாநிலத்தவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால், அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர்.
சுமார் 200 பேருக்கு மேல் திரண்டு வந்ததால், போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தி திரும்பி செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கூட்டம் கலையாததால் லேசான தடியடி நடத்தி போலீசார் அங்கிருந்த வடமாநிலத்தவர்கள் அப்புறப்படுத்தினர். பின்னர், அவர்களை தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதன் பிறகு, தொழிற்சாலை உரிமையாளர்களை அழைத்து, தொழிற்சாலைகளில் வேலைபார்த்து வந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்குவதற்கு இருப்பிடம் ஆகியவை தயார் செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தினர். பேருந்து, ரயில் சேவை ஏற்பாடு செய்த பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…