மதுரையில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிலை கண்டுபிடிப்பு

Default Image

மதுரையில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிலை கண்டுபிடிப்பு.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் செங்கமேடு பகுதியில் இருக்கும் பழமையான கிணறு ஆகியவற்றில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வில், தே.கல்லுப்பட்டி அருகில் காரைக்குடி ஊராட்சிக்குடபட்ட செங்கமேடு பகுதியில் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான மகாவீரர் சிற்பம் மற்றும் ராஜராஜ சோழன் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட கற்களில், பழமை வாய்ந்த தமிழ் மற்றும் வட்ட எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கல்வெட்டுகள் கிபி.13-ம் நூற்றாண்டை சேர்ந்த, காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி என்ற விருது பெயருடன் தொடங்கும் முதலாம் ராஜராஜ சோழனுடைய ஆட்சியாண்டை சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்