வேளாங்கண்ணி திருவிழாவில் 8 ஆம் தேதி வரை வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் வர தடை!

எட்டாம் தேதி மழை வெள்ளி மாநில மாவட்ட பக்தர்கள் வருவதற்கு வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய திருவிழா இந்த வருடம் கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் பக்தர்கள் இன்றி தொடங்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளதையடுத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சில தளர்வுகள் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருவிழாவுக்கும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருகிற எட்டாம் தேதி வரைக்கும் வேளாங்கண்ணி பேராலயத்தில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்கள் வருவதற்கு மாவட்ட ஆட்சியர் பிரவீன் அவர்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உள்ளூர் வாசிகளே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றி ஆலயத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏழாம் தேதி நடைபெறும் தேர்பவனி மற்றும் 8 ஆம் தேதி நடைபெற உள்ள கொடி இறக்க நிகழ்ச்சிகளிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எட்டாம் தேதி வரை தங்கும் விடுதிகளும் அனுமதிக்கப்படவில்லை, கடற்கரைக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.