புறம்போக்கு நிலங்கள்:நில உரிமை மற்றும் இரயத்துவாரி என மாற்றம்;9 பேர் கொண்ட குழு அமைப்பு – அரசாணை வெளியீடு!

Published by
Edison

அரசு மற்றும் டான்சிட்கோ புறம்போக்கு நிலங்களை,நில உரிமை மாற்றம் மற்றும் இரயத்துவாரி என மாற்றம் செய்து முடிவெடுக்க அதிகாரமளிக்கப்பட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத் (டான்சிட்கோ) தொழிற்பேட்டைகளில் உள்ள அரசு புறம்போக்கு என வகைப்பாடு கொண்ட நிலங்களை நில உரிமை மாற்றம் மற்றும் இரயத்துவாரி என வகைபாடு மாற்றம் செய்து முடிவெடுத்திட அதிகாரமளிக்கப்பட்ட குழு (Empowered Committee) அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி,மெட்ரோ ரயில்வே திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் நிலம் கையகப்படுத்துதல், நில எடுப்பு,பயன்பாட்டுகளின் திசை திருப்புதல், திட்டத்தால் பாதிக்கப்பட்டவரின் மறு வாழ்வு. உள்துறை மற்றும் உள்நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்களிடமிருந்து அனுமதி ஆகியவை குறித்து தீர்வு காணும் நோக்கில், திட்டம், மேம்பாடு மற்றும் சிறப்பு அமலாக்கு துறை, உயர்மட்ட குழு (High Power Committee) அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

மேலும்,தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ஆட்சேபனையுள்ள மற்றும் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை நிலவுரிமை மாற்றம் செய்வது குறித்து முடிவெடுத்திட செயலாக்க குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதே குழுவினர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு நிலவுரிமை மாற்றம் செய்வதிலும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் தக்க உத்தரவுகளை பெற்றுத் தரவும் 9பேர் கொண்ட இக்குழு செயல்படும்.குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:

  1. அரசு முதன்மைச் செயலாளர்,நிதித்துறை – உறுப்பினர்.
  2. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,தொழில் துறை – உறுப்பினர்.
  3. அரசு முதன்மைச் செயலாளர்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை –  உறுப்பினர்.
  4. அரசு செயலாளர்,குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை – உறுப்பினர்.
  5. தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் – உறுப்பினர்.
  6. நில நிருவாக ஆணையர் – உறுப்பினர்.
  7. மேலாண்மை இயக்குநர்,தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT) -உறுப்பினர்.
  8. மேலாண்மை இயக்குநர்,தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO) –  உறுப்பினர்.
  9. மேலாண்மை இயக்குநர் ,தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) -உறுப்பினர்.

Recent Posts

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

2 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

2 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

3 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

3 hours ago

ரபாடா 10.75 கோடி..பட்லர் 15.75 கோடி…திமிங்கலங்களை தூக்கிய குஜராத் அணி!!

ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…

3 hours ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாறை எழுதினார் ‘ஷ்ரேயஸ் ஐயர்’! ரூ.26.75 கோடிக்கு வாங்கிய பஞ்சாப்!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…

4 hours ago