ஓபிஎஸ் அறிவித்த 3 தொகுதி வேட்பாளர்களில் 2 நபர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இபிஎஸ் தரப்பு ஒரு தொகுதியில் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்து அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக மற்றும் கடந்த முறை ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த கர்நாடக தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாத காரணத்தால் அதிமுக தனியாக களம் காணுகிறது.
வேட்புமனு ஏற்பு – நிராகரிப்பு :
தமிழர்கள் அதிகம் வாழும், புலிகேசி, காந்திநகர், கோலார் தங்கவயல் தொகுதிகளில், புலிகேசி தொகுதியில் மட்டும் எடப்பாடி பழனிசாமி சார்பில் அரவிக்கபட்ட அன்பரசன் அதிமுக வேட்பாளராக களமிறங்குகிறார். அவரது வேட்புமனு நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே போல, ஓபிஎஸ் தரப்பு நெடுஞ்செழியன் என்பவரை அதிமுக வேட்பாளர் என அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், இபிஎஸ்-ஐ தேர்தல் ஆணையம் அங்கீகரித்த காரணமாக இபிஎஸ் அறிவித்த அன்பரசன் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது.
ஓபிஎஸ் – அதிமுக :
ஆனால், அதே வேளையில், ஓபிஎஸ் தரப்பு காந்திநகர் மற்றும் கோலார் தங்கவயல் தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. காந்திநகர் தொகுதியில் குமார் என்பவரும், கோலார் தங்கவயல் பகுதியில் ஆனந்தராஜ் என்பவரும் வேட்பாளர்களாக களமிறங்கினர். இதில் கோலார் தங்கவயல் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் மனு சுயேச்சை வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், காந்திநகர் தொகுதி வேட்பாளர் குமாரின் வேட்புமனு அதிமுக வேட்பாளர் என்ற அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இரட்டை இலை :
நேற்று முன்தினம் தான் இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டது. ஆனால், தற்போது ஓபிஎஸ் அணிக்கு அதிமுக என காந்திநகர் தொகுதியில் அங்கீகாரம் கிடைத்துள்ளதால் சற்று குழப்பம் நீடித்து வருகிறது . இருந்தும், அதிமுக கர்நாடகாவில் பெரும்பான்மையில்லாத காரணத்தால் இரட்டை இலை சின்னம் இரு தரப்புக்கும் கிடைப்பது சிரமமே என்றும், அங்கு அதிமுக சுயேச்சை போல் தான் போட்டியிடும் என்கிறது அரசியல் வட்டாரம்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…