வெளியானது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!மாணவிகள் – 96.5% பேர் தேர்ச்சி, மாணவர்கள் – 93.3% பேர் தேர்ச்சி
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவர்கள் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.தமிழகத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்புக்கு நடந்த முதல் பொதுத்தேர்வு இது ஆகும்.இன்று 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 95% தேர்ச்சி ஆகும்.மாணவிகள் – 96.5% பேர் தேர்ச்சி, மாணவர்கள் – 93.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு 91.3% தேர்ச்சி ஆகும். http://dge1.tn.nic.in , http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.மேலும் மாணவர்களின் செல்போன் எண்களுக்கும் மதிப்பெண்கள் விவரம் உடனடியாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் 2,634 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.தேர்வை எழுதிய 78 சிறைக் கைதிகளில், 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக அளவில் 98% தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம், 97.9% தேர்ச்சியுடன் திருப்பூர் 2-ம் இடம், 97.6% தேர்ச்சியுடன் கோவை 3-ம் இடம் பிடித்துள்ளது.