எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – அண்ணாமலை

Annamalai

சென்னையை அடுத்த பனையூரில் அண்ணாமலை வீட்டின் அருகே புதிய கொடி கம்பம் அமைக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேவையற்ற மோதல் போக்கு உருவாகும் என இஸ்லாமிய மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இஸ்லாமிய நடத்திய போராட்டம் காரணமாக பாஜகவினர் கொடி கம்பத்தை போலீசார் கழற்றி போலீஸாரால் கழற்றி அகற்றப்பட்டது. அப்போது பாஜகவினர் மற்றும் காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த தள்ளுமுள்ளு காரணமாக, கொடி கம்பத்தை அகற்றுவதற்காக நின்ற கிரேன் கண்ணாடி உடைக்கப்பட்டது. கொடிக்கம்பத்தை அகற்ற முயன்ற போது கிரேன் கண்ணாடி அடித்து உடைத்த பாஜகவினர் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.

திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய பாஜக சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும். பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் திரு.விவின் பாஸ்கரன்  அவர்களின் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.’ என தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்