வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பதே எங்கள் கணிப்பு-வைகோ
நாடாளுமன்ற தேர்தலின்போது மதிமுகவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் வைகோ.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார்.இதன் பின்னர் அவர் பேசுகையில்,நாடாளுமன்ற தேர்தலின்போது மதிமுகவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பதே எங்கள் கணிப்பு ஆகும்.4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் ஈடுபாடோடு தேர்தல் பணியில் ஈடுபட உள்ளோம்.பொன்னமராவதி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.அதற்கு காரணமான இருவரை கைது செய்ய வேண்டும். பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.