‘நம் தாய்த்திரு நாட்டின் தவப்புதல்வர்’ – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு டிடிவி தினகரன் ட்வீட்..!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு, ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்திய கள நாயகர், வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று என டிடிவி தினகரன் ட்வீட்.
இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது வரும் நிலையில், ஒவ்வொரு அரசியல் தலைவர்களும், அவரது வீரத்தையும், அவரது விடுதலை போராட்டத்தையும், நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், டிடிவி தினகரன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நம் தாய்த்திரு நாட்டின் தவப்புதல்வர், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்திய கள நாயகர், வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று!
வங்கத்தில் பிறந்து, இந்தியா முழுவதையும் வசீகரித்ததோடு, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் பெரிதும் நேசித்த மாவீரர் நேதாஜியின் பெருமைகளையும் தியாகங்களையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்!’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025