எமது தலைவர் ராகுல்காந்தி பிறப்பால் தமிழராக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் உணர்வால்,உள்ளத்தால் தமிழர் எனவும்,எமது தலைவருக்கு ‘தமிழன்’ சான்றிதழ் எதுவும் தேவையில்லை எனவும் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின்போது நேற்று பேசிய வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும்,கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி,மாநில உரிமைகளை எவ்வாறு காப்பது? என்று ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.மேலும்,உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில்,நாடாளுமன்றத்தில் தங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு அனைத்துத் தமிழர்கள் சார்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து,இது தொடர்பாக இன்று பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராகுல்காந்தி தமிழர் என்று சொல்வதற்கே முகாந்திரம் இல்லை. ஒட்டுமொத்தமாக திமுகவுடன் சேர்ந்து தமிழ் இனத்தையே கொன்றவர்கள். இதை வரலாறே மன்னிக்காது. ஒன்றரை லட்சம் தமிழர்களின் ஆன்ம மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ் இனத்தையே கொன்றுவிட்டு, இன்றைக்கு தமிழன் தமிழன் என்று பேசினால் தமிழன் நம்பவே மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில்,எமது தலைவர் ராகுல்காந்தி பிறப்பால் தமிழராக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் உணர்வால்,உள்ளத்தால் தமிழர் எனவும்,எமது தலைவருக்கு ‘தமிழன்’ சான்றிதழ் எதுவும் தேவையில்லை எனவும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
“தமிழன் என்றால் சுயமரியாதை,வீரம்,ஈகைமோடியரசிடம், அடிமையாகக் கிடக்கும் அதிமுக தமிழன் பற்றியெல்லாம் பேசலாமா? எமது தலைவர் ராகுல்காந்தி பிறப்பால் தமிழராக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் உணர்வால் ,உள்ளத்தால் தமிழர்.தமிழினத்தின் அடையாளமான சுயமரியாதை,வீரம்,ஈகையின் இலக்கணம்.
நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அவர் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் தமிழினம் அன்பைப் பொழிகிறது. அதிமுகவிடம் இருந்து எமது தலைவருக்கு ‘தமிழன்’ சான்றிதழ் எதுவும் தேவையில்லை”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…