எங்கள் அகமும் புறமும் தமிழ்நாடு தான் – ஆளுநர் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி
எங்கள் தமிழ்அகமே தமிழ்நாடு தான். எங்கள் அகமும் புறமும் தமிழ்நாடு தான் என திருமாவளவன் ட்வீட்.
ஒரு நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இதற்க்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், திருமாவளவன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அகம்- உள்ளத்தையும் குறிக்கும்; இல்லத்தையும் குறிக்கும். நாடு- தேசத்தையும் குறிக்கும்; தேடலையும் குறிக்கும். எங்கள் அகமும் தமிழ்தான். எங்கள் நாடலும் தமிழ்தான். எங்கள் தமிழ்அகமே தமிழ்நாடு தான். எங்கள் அகமும் புறமும் தமிழ்நாடு தான். அது விரிந்தது.பரந்தது. உயர்ந்தது.சிறந்தது.’ என பதிவிட்டுள்ளார்.