தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -ஓபிஎஸ், ஈபிஎஸ்

இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் என ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் நமக்கு புதியதொரு ஆண்டினை வழங்கி உள்ளார். இந்தப் புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வைத் தொடருவோம்.
புலரும் புத்தாண்டில், மக்கள் அனைவரது வாழ்க்கையும் புதுப் பொலிவு பெறச் செய்யட்டும்; புதிய வெற்றிகளையும், சந்தோஷத்தையும் கொண்டுவரட்டும்; பகைமை, வெறுப்பு உள்ளிட்ட தீய விஷயங்கள் அனைத்தும் ஒழிந்து; அன்பு, நட்பு உள்ளிட்ட நல்ல விஷயங்கள் இந்த மண்ணுலகில் பெருகட்டும் என்றும்; மக்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைப் பெற்றிடவும்.
உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்திடவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்லாசியோடு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025