“சட்டத்தின் ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம் என்பதே நம் இலக்கு” – முதல்வர் ஸ்டாலின்…!
காவல்துறை ஒளிபெறவும் வழிகாட்டவும் தேவையான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கடந்த ஆக.13-ம் தேதி தொடங்கிய நிலையில் பொது பட்ஜெட் தாக்கல் மற்றும் 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து,பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. அதன்படி,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
குறிப்பாக,சட்டப்பேரவை கடைசி நாளான இன்று காவல்துறையினரின் நலன் கருதி திட்டங்கள்,நீட் தேர்வு விலக்கு மசோதா,கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில்,சட்டத்தின் ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம் என்பதே நம் இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“உள்துறை மானியக் கோரிக்கை விவாதங்களின்மீது பதிலுரையாற்றி, தமிழ்நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துத் தரும் பொறுப்புடைய நமது காவல்துறை ஒளிபெறவும் வழிகாட்டவும் தேவையான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டேன். சட்டத்தின் ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம் என்பதே நம் இலக்கு”,என்று தெரிவித்துள்ளார்.
உள்துறை மானியக் கோரிக்கை விவாதங்களின்மீது பதிலுரையாற்றி, தமிழ்நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துத் தரும் பொறுப்புடைய நமது காவல்துறை ஒளிபெறவும் வழிகாட்டவும் தேவையான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டேன்.
சட்டத்தின் ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம் என்பதே நம் இலக்கு! pic.twitter.com/W8df7XhOBl
— M.K.Stalin (@mkstalin) September 13, 2021