எங்கள் முயற்சியும், சின்னம்மாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் – டிடிவி தினகரன்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம், எங்களுக்கு எந்த தடையும் ஏற்படுத்தி விடாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது. அதிமுகவை மீட்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு, அதை நோக்கித்தான் பயணித்து செல்கிறோம்.
தேர்தலில் வெற்றி, தோல்வி எந்த தடையும் ஏற்படுத்தாது. தங்கள் இலக்கை நோக்கி பயணிப்போம். எங்கள் முயற்சியும், சின்னம்மாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் இலக்கு. கொள்கைக்காக தங்களுடன் இலக்கை நோக்கி பயணிப்பார்கள், சுயநலத்திற்காக வந்தவர்கள் செல்கின்றனர்.
அதிமுக தொடங்கப்பட்டது முதல் ஒற்றை தலைமையில் தான் பயணித்தது. தற்போது அது மாறியுள்ளது என்றும் மீண்டும் அது சரியாகும். திமுக எதை எதிர்த்து போராடியதோ அதை எல்லாம் தற்போது செய்து கொண்டியிருக்கிறது என விமர்சித்து, உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும், நடவடிக்கை சட்டப்படி இருந்தால் சரிதான் என முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை குறித்த கேள்விக்கு பதில் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…
February 12, 2025![Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jasprit-Bumrah-Varun-chakaravarthy-Yashasvi-jaiswal.webp)
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)