எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என எழுதி வாசலில் மாட்டுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்க இருப்பதால், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. தேர்தலில் பணம் புழங்க கூடாது என்று பல்வேறு இடங்களில் காவல்துறை குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் சில இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத பல பணங்கள் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது என்றும் வாக்காளர்கள் பணம் வாங்க கூடாது எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். ஓட்டுக்கு பணம் வாங்கி தங்கள் உரிமைகளை விற்காதீர்கள் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம், ஓர் அட்டையில் “எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என எழுதி வாசலில் மாட்டுங்கள் என்றும் நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் எனவும் கூறியுள்ளார்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…