கனவுகள் பெரிதாக இருந்ததால் தான் நமது சாதனைகள் பெரிதாக இருக்கும் – முதலமைச்சர்

Default Image

தமிழ்நாடு வளர்ச்சி அடைய இலக்குகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு கூட்டத்தில் பேச்சு.

சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள திட்டங்களின் நிலை மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை செயலாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும். வளர்ந்த நாடுகள், தெற்காசிய நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை நாம் பெற முயற்சிக்க வேண்டும். திட்டம் அடிப்படையில் மட்டுமல்லாது நாம் அடைய வேண்டிய நோக்கத்தினை சென்றடையும் வகையில் செய்யப்பட வேண்டும்.

வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு வளர்ச்சி அடைய இலக்குகளை நிர்ணயம் செய்ய வேண்டும். ‘Think Big, Dream Big, Result Will be Big’ என்கின்ற கூற்றின்படி, நமது சிந்தனைகளும், கனவுகளும் பெரிதாக இருந்ததால் தான் நமது சாதனைகளும் பெரிதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்