கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுகவின் சார்பில் சுந்தர்ராஜனும், புதிய தமிழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் போட்டியிட்டார்கள்.
இதில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.எனவே அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவர் தொடர்ந்த வழக்கில், தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்து சுந்தர்ராஜன் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது.
ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஏற்பட்ட மாற்றத்தால் ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் தினகரன் அணிக்குத் சென்றார். முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த நிலையில் 18 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் சுந்தர்ராஜன் பதவி இழந்தார். பின் சுந்தர்ராஜன் உட்பட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை 3 பேர் கொண்ட உயர் நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.பின்னர் அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…