உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் நடக்கும் என கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 23ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில், மூளை சாவு அடைந்த அரசு ஊழியர் வடிவேலு, தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியிருந்தார். தமிழகத்தில் முதல் முறையாக உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய அரசு ஊழியர் வடிவேலுவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இயக்குநர்கள் சுசீந்திரன், மனோஜ் பாரதிராஜா, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், நடிகர் சியாம் செல்வன் உள்ளிட்ட 16 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான படிவங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திரைத்துறை இயக்குனர்கள் சுசீந்திரன், மனோஜ் பாரதிராஜா மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், நாயகன் சியாம் செல்வன், நாயகிகள் நக்ஷா சரண், ரக்ஷனா உள்ளிட்ட 16 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்குரிய படிவங்களை இன்று காலை நம்மிடத்தில் ஒப்படைத்தனர் மனிதநேயம் மிக்க அவர்களுடைய இச் செயல் பாராட்டுக்குரியது மற்றவர்களுக்கு முன்னுதாரணமானது.’ என பதிவிட்டுள்ளார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…