ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்தி நகரைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியின் மகன் பெயர் சரத்குமார்,இவரது வயது 23.இவர் சிவகங்கையில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை வழக்கம்போல பணி முடிந்து இளையான்குடி ரோடு வழியாக தனது இருசக்கர வாகனத்தில் பரமக்குடிக்கு செல்லும் போது அதிகரை விலக்கு ரோட்டில் நிலைதடுமாறி அவரது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் உடலுறுப்பு தானம் குறித்து விளக்கவே, சரத்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் சம்மதித்தனர்.இதை தொடர்ந்து, மதுரை, சென்னை மருத்துவக்கல்லுாரி டீன்கள் மூலம் அவரது உடலுறுப்புகள் எடுக்கப்பட்டது. இதில் இதயம் விமானம் மூலம் சென்னைக்கும், சரத்குமாரின் கண்கள் திருச்சிக்கும், அவரது சிறுநீரகங்கள் மதுரை மற்றும் தஞ்சாவூருக்கும் வழங்கப்பட்டது. இதன்மூலம் மறைந்த சரத்குமார் எட்டு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். இதில், சரத்குமாரின் கல்லீரல் கோயமுத்தூர் மெடிக்கல் சென்டரில் உள்ள ஒரு நோயாளிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
எனவே ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் 30 நிமிடங்களில், மதுரையில் இருந்து கோவைக்கு சரத்குமாரின் கல்லீரல் எடுத்து வரப்பட்டது. கோவை வட்டமலையாம் பாளையத்தில் பத்திரமாக தரையிறங்கி அங்கிருந்து கல்லீரல் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும், போக்குவரத்தை நிறுத்தி சீர்மிகு காவல்துரையினர் எந்த தடையின்றி செல்ல வழி செய்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சரத்குமாரை நினைவு கூற வைத்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…