நீட் மூலம் சாதாரண மாணவர்கள் மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்தது – அண்ணாமலை
நீட் மூலம் சாதாரண மாணவர்கள் மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்தது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.
மதத்தோரும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன்கீ பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த ஆண்டின் கடைசி மன்கீ பாத் நிகழ்ச்சி என்பதால் இதை திருவிழா போல் கொண்டாட அடையாற்றில் கராத்தே தியாகராஜன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 2015- 16ஆம் ஆண்டில் நீட் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததை ஒப்புக் கொள்கிறோம். ஆனால், 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வு வெற்றி பெற்றது. இதுபோன்று 2021 ஆம் ஆண்டும் நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பலனடைந்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
நீட் மூலம் தான் சாதாரண கிராமப்புற பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்துக்கு தான் அதிகம் மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, மருத்துவ படிப்பு இடங்களை இரு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் இது வேறு எங்கும் கிடையாது எனவும் குறிப்பிட்டார்.