அரசாணை 115 சர்ச்சை.! குழுவின் வரம்புகள் ரத்து.! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.!
மனித வள மேலாண்மை துறை சார்பில் அரசாணை 115 எனும் விதியின் கீழ் அமைக்கப்பட்ட குழுவின் வரம்புகள் தற்போது ரத்து செய்யப்பட்டு, புதிய வரம்புகள் விதிக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் அண்மையில், மனித வள மேலாண்மை துறை சார்பில் அரசாணை 115 எனும் விதியை கொண்டுவரப்பட்டது. இந்த விதியின் படி மனிதவள சீர்திருத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பரூக்கி நியமிக்கப்பட்டார்.
இந்த குழுவானது, அரசு பணிகளில், திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்ப ஆய்வு மேற்கொள்வது. டி மற்றும் சி பிரிவு பணிகளுக்கு வெளிமுகமை மூலம் பணியாட்களை நியமிக்க சாத்திய கூறுகளை ஆராய்வது, வெளிமுகமை ஆள்சேர்ப்பு நிறுவனங்களை ஆராய்ந்து அதன் மூலம் அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்வது என பல்வேறு ஆய்வுகளை மேற்கண்ட குழு மேற்கொள்ள இருந்தது.
இந்த அரசாணைக்கு எதிராக பல்வேறு அதிமுக உள்ளிட்ட கட்சியினர் கருத்து தெரிவித்தனர். மேலும், அதனை நீக்க கோரி வலியுறுத்தி அறிக்கைகளையும் வெளியிட்டனர்.
தற்போது இந்த அரசாணை 115ஐ குறித்து, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி , எந்த ஒரு குழுவை அரசு அமைத்தலும், அந்த குழுவின் பரிந்துரைகளால் அரசு ஊழியர்களுக்கு பாதிப்பு இருக்காது என்பதை அரசு உறுதி செய்கிறது. என குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், இந்த குழுவின் வரம்புகள் தற்போது ரத்து செய்யப்பட்டு, புதிய வரம்புகள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குழு பரிந்துரைகளும் பணியாளர் சங்கத்தின் ஆலோசனையையும் கேட்டு தான் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதியளித்தது.