சமூக விலகலை கடைப்பிடிக்காததால் பெரிய மார்க்கெட்டை மூட உத்தரவு.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க செல்லும்போது அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மக்களின் அத்தியாவசியத்திற்காக மளிகைக் கடைகள், மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.ஆனால் புதுச்சேரியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காததால் தற்காலிகமாக மூட புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் கூறுகையில், மக்கள் தங்கள் உயிரைப்பற்றி கவலைப்படவில்லை. சமூக விலகலுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனவே கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.