வரும் 6-ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி கட்சிக்குள் எழுந்தது.இதனிடையே அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.இந்த செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
கூட்டம் நிறைவடைந்த பின் ,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறுகையில் ,அக்டோபர் 7-ஆம் தேதி அதிமுகவின் முதமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவிபார்கள் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க. எம்எல்ஏ-க்கள் அனைவரும், அக்டோபர் 6-ஆம் தேதி சென்னை தலைமைக்கழகம் வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…