சென்னை : செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகளை வகுக்க தமிழக அரசு 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவேற்காட்டை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான ஆண்டனி கிளெமென்ட் ரூபின், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், வேலை அல்லது விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் போது அவற்றை பராமரிப்பு மையங்களில் கட்டணம் செலுத்தி சேர்க்கின்றனர்.
ஆனால், நாட்டில் முறைப்படுத்தப்படாத பராமரிப்பு மையங்கள் சில இயங்கி வருவதால் அதில் பணிபுரியும் சில தகுதி இல்லாத பராமரிப்பாளர்களால், செல்லப்பிராணிகள் சில நேரங்களில் உயிரிழக்க நேரிடுவதாகவும், ஆண்டனி குறிப்பிட்டுள்ளார்.
இதனால், வர்த்தக நோக்கில் செயல்படும் மையங்களை ஆய்வு செய்து அதற்கு சரியான ஒப்புதல் வழங்க வேண்டுமென்றும், இதுபோன்ற மையங்களை முறைப்படுத்த தனி விதிகளை வகுக்க வேண்டும் எனவும் ஆண்டனி கூறியுள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, 8 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…