8 வாரத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் !! தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகளை வகுக்க தமிழக அரசு 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவேற்காட்டை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான ஆண்டனி கிளெமென்ட் ரூபின், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், வேலை அல்லது விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் போது அவற்றை பராமரிப்பு மையங்களில் கட்டணம் செலுத்தி சேர்க்கின்றனர்.
ஆனால், நாட்டில் முறைப்படுத்தப்படாத பராமரிப்பு மையங்கள் சில இயங்கி வருவதால் அதில் பணிபுரியும் சில தகுதி இல்லாத பராமரிப்பாளர்களால், செல்லப்பிராணிகள் சில நேரங்களில் உயிரிழக்க நேரிடுவதாகவும், ஆண்டனி குறிப்பிட்டுள்ளார்.
இதனால், வர்த்தக நோக்கில் செயல்படும் மையங்களை ஆய்வு செய்து அதற்கு சரியான ஒப்புதல் வழங்க வேண்டுமென்றும், இதுபோன்ற மையங்களை முறைப்படுத்த தனி விதிகளை வகுக்க வேண்டும் எனவும் ஆண்டனி கூறியுள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, 8 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025