முறைகேடாக பெற்ற இழப்பீடு அனைத்தையும் திரும்ப வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
நிலம் கையகப்படுத்தப்பட்டதில் போலி நில ஆவணங்களை காண்பித்தவர்களுக்கு வழங்கிய இழப்பீட்டை திரும்ப பெற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீட்டை திரும்ப பெறாவிடில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில் போலி ஆவணங்கள் காண்பித்து இழப்பீடு பெற்றதாக அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. முறைகேடாக இழப்பீடு பெற்றவர்களிடம் இருந்து அதனை திரும்ப வசூலிக்க கோரி ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த நிலையில் சுமார் ரூ.20 கோடி முறைகேடாக பெற்ற இழப்பீடு அனைத்தையும் திரும்ப வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இழப்பீட்டை திரும்ப பெறாவிடில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனவும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை ரூ.4 கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது என சிபிசிஐடி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…