இறந்த அதிகாரியை இடமாற்றம் செய்து உத்தரவு..!
கடந்த 27-ம் தேதி தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் சார்பில் அரசு அலுவலர்களுக்குக்கான இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.அதில் முதல் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் அதிகாரியாக முத்துக்குமரன் என்பவர் வேலை செய்து வந்தார்.
முத்துக்குமரன் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.இந்நிலையில் அரசு அலுவலர்களுக்குக்கான இடமாற்றம் பட்டியலில் சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் வேலை செய்த முத்துக்குமரன் பெயர் முதல் பெயராக இடம் பெற்று இருந்தது.
முத்துகுமாரனை சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் இருந்து அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி நகராட்சி ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிறை தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.