#Breaking : டாஸ்மாக்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் வாங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டாஸ்மாக் மதுபானங்களின் கொள்முதல், விற்பனை விவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டிருந்தார். அதனை வழங்க டாஸ்மாக் மறுத்துவிட்டது.
இதனை தொடர்ந்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவை டாஸ்மாக் செயல்படுத்ததாக காரணத்தால் 10 ஆயிரம்ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், அதனை அடையாறு புற்றுநோய் மையத்திற்கு நன்கொடையாக கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தது.
இன்று வழக்கு விசாரணை மீண்டும் வருகையில் வரும் ஜனவரி 6ஆம் தேதி, சீலிடப்பட்ட கவரில் டாஸ்மாக் மதுபானம் கொள்முதல் குறித்த விவரங்களை அதாவது, எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு விலைக்கு என்னென்ன மதுபானங்கள் வாங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.