#BREAKING: பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!
பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
கடந்த மாதம் 28ம் தேதி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி வளாகத்தில் வேன் மோதி 2-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இந்த விவகாரத்தில் வேன் ஓட்டுநா் பூங்காவனம், வேனில் இருந்து குழந்தைகளை இறங்கிவிடும் பள்ளி ஊழியர் ஞானசக்தி, பள்ளித் தாளாளா் ஜெய சுபாஷ், பள்ளி முதல்வா் தனலட்சுமி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநர் பூங்காவனம், ஊழியர் ஞானசக்தி ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.