மனிதநேயம் குறித்து பேசிய மாணவர் அப்துல்கலாமுக்கு வீடு ஒதுக்கி ஆணை பிறப்பிப்பு..!

Default Image

மனிதநேயம் குறித்து பேசிய மாணவர் அப்துல்கலாமுக்கு  தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் ட்வீட்.

அப்துல் கலாம் என்ற மாணவர் மனிதநேயம் குறித்து பேட்டியளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வந்த நிலையில்,  மனிதநேயம் குறித்து பேட்டியளித்த மாணவர் அப்துல்கலாமை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டிய போது, தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக அவருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் நேற்று தொலைபேசி வாயிலாக உத்திரவிட்டார்.

இதனையடுத்து அமைச்சர் அவர்கள், துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும் என்றும் பின்னர் யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் என்று உரக்கச் சொன்ன மாணவர் ஏ.அப்துல்கலாமை பாராட்டி அவருக்கு “பெரியார் இன்றும் என்றும்” நூலினை பரிசாக வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்