தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட அறையில் பாதுகாக்க உத்தரவு.!
தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட அறையில் பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தபால் வாக்கு செய்துவோரின் பட்டியல் வழங்கப்படாத நிலையில், நேற்று முதல் தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் பெறத்தொடங்கி உள்ளதாக திமுக சார்பில் அவசர முறையீடு செய்திருந்தது. இதன் மீதான விசாரணையின் போது, தபால் வாக்காளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு பிறகு, அடுத்து 24 மணிநேரத்திற்கு பிறகுதான் தபால் வாக்குகளை செலுத்துவோரின் வாக்குகளை பெறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தொகுதி வாரியாக தபால் வாக்காளர்கள் பட்டியலை மார்ச் 29ம் தேதிக்குள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவித்தை தொடர்ந்து அந்த வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இதன்பின்னர் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட அறையில் வைத்து தபால் வாக்குகளை பாதுகாக்க வேண்டும் என்றும் தபால் வாக்குப்பதிவு முறையில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது எனவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.