முகக்கவசங்களை திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை
முகக்கவசங்களை திரும்ப ஒப்படைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், இந்த பரப்பான சூழலில் 10-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறவிருந்த நிலையில், தற்போது இந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டன. தற்போது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பள்ளிகளில் மீதமுள்ள முகக்கவசங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகளை திரும்ப ஒப்படைக்க மாவட்ட அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.