பப்ஜி மதனின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பப்ஜி கேம் விளையாடும் போது சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு வருவதாக யூடியூபர் பப்ஜி மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பப்ஜி மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த புகாரில் தலைமறைவான மதன் கடந்த ஜூலை 18-ஆம் தேதி தருமபுரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீன் கோரி மதன் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் தம்மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை, பெண்களுக்கு எதிராக கொடுமைகள் ஏதும் செய்யவில்லை, காவல்துறை ஏற்கனவே என்னை காவலில் எடுத்து விசாரித்துள்ளதால் ஜாமீன் தேவை என நீதிமன்றத்தில் பப்ஜி மதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வரும் திங்கள்கிழமை சென்னை சைபர் கிரைம் போலீசார் பதிலளிக்க நீதிபதி செல்வகுமார் உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே மதனின் மனைவிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அப்போது மதனின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…