அதிமுக நிவாரண உதவி கூட்டத்தில் சிறுமி உயிரிழப்பு.. ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதிமுக சாா்பில் கொருக்குப்பேட்டையில் நேற்று முன்தினம்  நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிவாரணப் பொருள்கள் பெறுவதற்காக ஏராளமானோா் வரிசையில் காத்து நின்றனா். அதில், நிவாரண பொருட்கள் வாங்க வந்த தண்டையாா்பேட்டை சாஸ்திரி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த யுவஸ்ரீ (14) என்ற சிறுமி ஒருவர் காத்திருந்தாா்.

நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து சென்றுவிட்டார். அப்போது, நிவாரண பொருட்கள் வாங்க கூட்ட நெரிசலில் வரிசையில் நின்றிருந்த சிறுமி திடீரென மயங்கி கீழே  விழுந்துவிட்டார். இதையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

கைதிகள் விடுதலை – தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

இது தொடா்பாக ஆர்கே நகர் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை ஆர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி வழங்கிய நிவாரணப் பொருட்கள் வாங்க வந்த 14 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்தது. ஆனால், மூச்சு திணறியோ, மிதிப்பட்டோ சிறுமி உயிரிழக்கவில்லை என பிரேத பரிசோதனையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், சென்னை மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பேரில், சிறுமி உயிரிழப்பு தொடர்பாக நாளை மறுநாள் ஆர்டிஓ விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

9 minutes ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

21 minutes ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

27 minutes ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

2 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

3 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

4 hours ago