#Breaking: சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு.!
சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சாட்சியம் அளித்த பெண் காவலர் உரிய பாதுகாப்பு இல்லை என புகார் எழுந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.