தந்தை -மகன் உயிரிழந்த விவகாரத்தில் முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதில் 10 போலீசார் கைது செய்யப்பட்டனர்.இதன் பின்னர் சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
எனவே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள், சிசிடிவி காட்சிகள், உள்ளிட்டவையை சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் சிபிசிஐடி ஒப்படைத்தது.இதனால் உயிரிழந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வீடு ,பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவமனை என சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கு முன் தந்தை மகன் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். எனவே கைதான போலீஸாரை காவலில் எடுக்க மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிபிஐ மனுத்தாக்கல் செய்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,5 பேரையும் நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18…
வேலூர்: திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட…
இலங்கை : ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவலையை எழுப்பி வருகிறார்கள். நேற்றைய…
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…