டாஸ்மாக் கடையில் விலைப்பட்டியல் வைக்கவும், பில் வழங்கவும் உத்தரவு.!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கவும் மற்றும் பில் வழங்கவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கவும், மதுபானத்தின் விலைப் பட்டியலை வைக்கக் கோரியும் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு தமிழக வாணிப கழக முதன்மை இயக்குநர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கவும், பில் வழங்கவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பில், விலைப்பட்டியல் குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது என்பது குறிப்பித்தக்கது.